புவனஸ் ஐரஸில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கும்பல் மூன்று இளம் பெண்களை கொடூரமாக வதை செய்து, பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் உயிரை பறித்த சம்பவம் அந்நாட்டு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் — பிரெண்டா டெல் கஸ்டில்லோ, மொரேனா வெர்டி, லாரா குதியேரெஸ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போன நிலையில், அவர்களின் உடல்கள் புவனஸ் ஐரஸின் புறநகரப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
“இந்த பெண்கள் ஒரு போலி நிகழ்ச்சிக்கான அழைப்பின் பேரில் வாகனத்தில் ஏறிச் சென்றனர். ஆனால் உண்மையில், சர்வதேச போதைப்பொருள் கும்பல் அமைத்த வலையில் சிக்கி, கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த வதைச் சம்பவம் நேரடியாக Instagram-ல் ஒளிபரப்பப்பட்டது. சுமார் 45 பேர் அந்த மூடப்பட்ட குழுவில் பார்த்துள்ளனர்” என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜாவியர் அலோன்சோ தெரிவித்தார்.
புவனஸ் ஐரஸின் பெண்கள் மற்றும் பன்முகத்தன்மை அமைச்சகம் இந்தச் சம்பவத்தை பெண்கொலை என அறிவித்துள்ளது.
“இது பாலின அடிப்படையிலான வன்முறையின் மிக மோசமான வெளிப்பாடு. போதைப்பொருள் குற்றச்செயல்களின் சூழலில் இது மனிதத்தன்மையிழப்பு, கொடூரம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றின் வெளிப்பாடாகும். அவர்களின் குடும்பத்தாருடன் எங்கள் இரங்கலைப் பகிர்கிறோம்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளம் பெண்கள் கடைசியாக CCTV காட்சியில், ஒரு வெள்ளை பிக்கப் டிரக்கில் ஏறிச் செல்லும் தருணத்தில் பதிவாகியிருந்தனர்.
அவர்களின் கைப்பேசி சிக்னல் கடைசியாக பதிவான வீடு அருகே அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, எரிக்கப்பட்ட பிக்கப் டிரக் அங்கு இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கழிப்புநிலப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Source:-Daily Mirror
கருத்தை பதிவிட