2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவர் அல்லது இருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் சந்திப்பு ஒன்றில் அவர் மேலும் கூறியதாவது, “தற்போதைய நிர்வாகம் முழுமையற்ற மற்றும் பிழைகளால் பாதிக்கப்பட்ட விசாரணையைத் தான் பெற்றுக் கொண்டது. உண்மையை வெளிக்கொணர புதிய விசாரணைகளை தொடங்க வேண்டிய நிலையும் உள்ளது.
தாக்குதலுக்கு உண்மையில் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதே தற்போதைய விசாரணைகளின் குறிக்கோள் ஆகும். அரசியல் காரணங்களால் நீதி தாமதமாகியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு சந்தேகநபர்கள் ஆட்சிக்கு வந்து, உயர் பதவிகளையும் வகித்தனர். சான்றுகள் அழிக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மாற்றப்பட்டதால் ஆரம்பகட்ட விசாரணைகள் தவறான பாதையில் சென்றன என அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் குற்றப்புலனாய்வு துறையின் (CID) மீதான நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியதோடு, சமீபத்திய CID அதிகாரிகள் கைது சம்பவங்கள் உள்நாட்டு சபோட்டாஜை வெளிக்கொணர்ந்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் “இது நேற்று நடந்த சம்பவமல்ல, சிக்கலான சூழ்நிலையிலிருந்து நாங்கள் இதை பெற்றுள்ளோம். இருப்பினும் CID இத்திட்டத்தை முன்னெடுக்கக் கூடிய திறன் உடையது,” என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அவர் மேலும், முன்னாள் இராணுவ அதிகாரிகளில் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், விசாரணைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் கூறினார்.
கருத்தை பதிவிட