ரந்தெனிகலா சாலையில் பயணித்த தனியார் ஆடை தொழிற்சாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
திடீர் இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையை விட்டு விலகி ஓரத்தில் இருந்த கல் அடைப்பில் மோதி நின்றது.
காயமடைந்தவர்கள் உடனடியாக கண்டகெட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனை தரப்பில் கிடைத்த தகவலின்படி யாருக்கும் ஆபத்தான நிலை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source-Daily mirror
கருத்தை பதிவிட