இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் “ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்” (African Swine Fever) நோய்க்கு ஆபத்தான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு அக்டோபர் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மிருக உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த வர்த்தமானி அறிவிப்பு 1992ஆம் ஆண்டு இல.59 என்ற எண்ணைக் கொண்ட “மிருக நோய்கள் சட்டத்தின்” பிரிவு 5(3)ன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. இது ரத்து செய்யப்படவில்லையென்றால் அல்லது நீட்டிக்கப்படவில்லையென்றால், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக பல மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பரவியுள்ளதையடுத்து, அரசாங்கம் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.
முக்கியக் கட்டுப்பாடுகள்
- அனுமதி இல்லாமல் பன்றிகளை அறுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
- அனுமதியின்றி பன்றிமாமிசம் அல்லது அதனுடன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது, சேமிப்பது, விநியோகிப்பது, அல்லது பரிமாறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
- அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாத இறைச்சி களஞ்சியங்கள் அல்லது மாமிச செயலாக்க நிலையங்கள் இயங்க அனுமதியில்லை.
இந்த நடவடிக்கைகள் பன்றி காய்ச்சலின் பரவலை தடுக்கவும், உள்நாட்டு மிருக உற்பத்தித் துறையை பாதுகாக்கவும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்தை பதிவிட