ஒட்டுசுட்டான் – மாங்குளம் பிரதான வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் இன்று காலை ஒரு காவல் துறை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டது.
தகவலின்படி, வாகனம் பணிக்காக சென்றுகொண்டிருந்த போது திடீரென சக்கரம் பழுதடைந்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்தை பதிவிட