யாழ்ப்பாணம் அனலதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 14 பேர் நேற்று இரவு இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் துறை இணைந்து நடத்திய விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படைப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான இந்திய மீன்பிடிப் படகு ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததை தொடர்ந்து, அதனைச் சுற்றிவளைத்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகு ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி மீன்பிடி மேற்பார்வையாளர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இலங்கை கடற்படை வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியை தடுக்கவும், கடல் வளங்களை பாதுகாக்கவும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
கருத்தை பதிவிட