இந்தியாவின் தலைநகரான டெல்லி ரெட் கோட்டை மெட்ரோ நிலையம் அருகே இன்று (திங்கள்) மாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பு ரெட் கோட்டை மெட்ரோ நிலையம் நுழைவாயில் இலக்கம் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தால் சுற்றுவட்டார வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததுடன், அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறி விழுந்தன.
சம்பவம் இடம்பெற்றதையடுத்து, டெல்லி முழுவதும் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
டெல்லி தீயணைப்பு சேவையின் (DFS) ஏழு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக இடத்துக்கு விரைந்து தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டன.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், தீக்கிரையான வாகனங்கள் மற்றும் அடர்ந்த புகை வானத்தை மூடியிருப்பது தென்பட்டது.
வெடிப்பின் அதிர்வால் கடைகள் குலுங்கியதாகவும், பலர் காயமடைந்து அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தீவிரவாதத்தடுப்பு பிரிவு (Anti-Terror Squad) மற்றும் டெல்லி பொலிஸ் சிறப்பு அணி (Special Cell) சம்பவ இடத்தை வந்தடைந்து, தீவிரவாதத் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
கருத்தை பதிவிட