போதைப்பொருள் அச்சுறுத்தலின் பலியாக குழந்தைகள் மாறுவதைத் தடுக்கப்பட வேண்டியது தமது முதன்மை இலக்காக இருப்பதாகவும், எந்த குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய எவருக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத ஆட்சி தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (20) தங்கல்லை பொது மைதானத்தில் நடைபெற்ற “ஒரே தேசம்” என்ற போதைப்பொருள் எதிர்ப்பு தேசிய இயக்கத்தின் தென் மாகாண திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் அவர் பேசியபோது இதைத் தெரிவித்தார்.
நாட்டினரின் ஆணை மற்றும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு இந்த தேசியப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
அதேசமயம், நாட்டின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக சில குழுக்கள் செயற்கை பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களை உருவாக்க முயல்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“மக்களின் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து விலக்கி, தாங்களே உருவாக்கும் செயற்கை பிரச்சினைகளுக்கு திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்த வலைகளில் சிக்கமாட்டோம்,” என்று திசாநாயக்க வலியுறுத்தினார்.
போதைப்பொருள் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது வரை தேசியப் போராட்டம் உறுதியுடன் முன்னேறும் என்றும், இந்தப் போரில் வெற்றி நிச்சயம் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
(Ada Derana)
கருத்தை பதிவிட