2025 ஆம் ஆண்டில் இலங்கை 23 இலட்சம் 33 ஆயிரத்து 797-ஆவது சுற்றுலாப் பயணியை வரவேற்றுள்ளது. இதன் மூலம், நாட்டின் வரலாற்றில் ஒரே ஆண்டில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை என்ற புதிய சாதனையை இலங்கை பதிவு செய்துள்ளது.
இந்த சாதனை சுற்றுலாப் பயணி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை வந்தடைந்ததாக சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாத்துறையின் மீளெழுச்சி, சர்வதேச விமான இணைப்புகளின் விருத்தி, அரசின் தொடர்ச்சியான சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கை ஆகியவை இந்த சாதனைக்குக் காரணமாக அமைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சாதனை, எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாத்துறையின் மேலும் முன்னேற்றத்திற்கும் வலுசேர்க்கும் என சுற்றுலா துறை வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

கருத்தை பதிவிட