முகப்பு இலங்கை லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை; லாஃப்ஸ் உயர்வு – ஜனவரியில் இருவித நிலை!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை; லாஃப்ஸ் உயர்வு – ஜனவரியில் இருவித நிலை!

பகிரவும்
பகிரவும்

026 ஜனவரி மாதத்திற்காக லிட்ரோ (Litro) வீட்டு பயன்பாட்டு எல்.பி. எரிவாயு சிலிண்டர் நிரப்பு விலைகள் மாற்றமின்றி தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு காரணமாக எரிவாயு விலைகளை அதிகரிப்பது நியாயமானதாக இருந்தாலும், நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு விலைகளை மாற்றமின்றி வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவன பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, லிட்ரோ வீட்டு பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வருமாறு:

  • 12.5 கிலோ சிலிண்டர் – ரூ. 3,690

  • 5 கிலோ சிலிண்டர் – ரூ. 1,482

  • 2.3 கிலோ சிலிண்டர் – ரூ. 694

இதற்கிடையில், லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு நிறுவனம், நேற்று (ஜனவரி 01) முதல் வீட்டு பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலைகளின்படி,
12.5 கிலோ சிலிண்டர் ரூ.150 உயர்வுடன் ரூ.4,250 ஆகவும்,
5 கிலோ சிலிண்டர் ரூ.65 உயர்வுடன் ரூ.1,710 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாதாந்திர எரிபொருள் விலை திருத்த அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தாய்ப்பால் ஊட்டியபோது 41‑நாள் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, தாய்ப்பால் குடித்தபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்த...

கடுவெல–கொள்ளுப்பிட்டி வீதியில் வாகனங்களை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது!

கடுவெல–கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், நகர்ந்து கொண்டிருந்த பல வாகனங்களை ஒரு பொருளால் தாக்கும் மோட்டார் சைக்கிள்...

விமல் வீரவன்ச தொடர் சத்தியாக்கிரகவை வாபஸ் பெற்றார்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவருமான விமல் வீரவன்ச கல்வி அமைச்சு...

வெலிகந்தவில் காவல்துறையினரை தாக்க முயற்சி: 28 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பகுதியில், கூரிய ஆயுதம் கொண்டு காவல்துறையினரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் 28...