முகப்பு இலங்கை கனடாவில் கோர வீதி விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!
இலங்கைஉலகம்செய்திசெய்திகள்

கனடாவில் கோர வீதி விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு!

பகிரவும்
பகிரவும்

கனடாவில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய திருமதி ராஜகாந் அனுஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை எற்றோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள டிக்சன் வீதியில், வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதுடைய சாரதி ஒருவரால் இயக்கப்பட்ட கனரக வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியைக் கடக்க முற்பட்ட அனுஷா மீது மோதியதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதும், மூன்று பிள்ளைகளின் தாயார் என்பதும் குடும்பத்தினரும் உறவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்து குறித்து கனேடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தாய்ப்பால் ஊட்டியபோது 41‑நாள் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, தாய்ப்பால் குடித்தபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்த...

கடுவெல–கொள்ளுப்பிட்டி வீதியில் வாகனங்களை தாக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது!

கடுவெல–கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், நகர்ந்து கொண்டிருந்த பல வாகனங்களை ஒரு பொருளால் தாக்கும் மோட்டார் சைக்கிள்...

விமல் வீரவன்ச தொடர் சத்தியாக்கிரகவை வாபஸ் பெற்றார்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணி (NFF) தலைவருமான விமல் வீரவன்ச கல்வி அமைச்சு...

வெலிகந்தவில் காவல்துறையினரை தாக்க முயற்சி: 28 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த பகுதியில், கூரிய ஆயுதம் கொண்டு காவல்துறையினரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் 28...