முகப்பு இந்தியா வேலூர் மாவட்டம் கட்பாடி அருகே பயங்கர சம்பவம்!
இந்தியாசமூகம்செய்திசெய்திகள்

வேலூர் மாவட்டம் கட்பாடி அருகே பயங்கர சம்பவம்!

பகிரவும்
பகிரவும்

வேலூர் மாவட்டம் கட்பாடி அருகே பயங்கர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

36 வயதான கர்ப்பிணி பெண், பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது நகர்ந்து கொண்டிருந்த ரயிலிலிருந்து தள்ளப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, முன் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 31 வயது கே. ஹேமந்த்ராஜ் என்பவர் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையால் (GRP) கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வந்தார். கர்ப்பிணியாக இருப்பதால் தாயிடம் செல்வதற்காக கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக பயணம் செய்துள்ளார். ரயில் ஜோலார்பேட்டை வந்தபோது, வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்த கே. ஹேமந்த்ராஜ் பெண்கள் கம்பொர்ட்மெண்டில் ஏறியுள்ளார். அவர் உள்ளே வந்ததும், பாதிக்கப்பட்ட பெண் “இது பெண்கள் கம்பொர்ட்மெண்ட், வெளியே இறங்குங்கள்” என்று கூறியுள்ளார். ஆனால், “ரயில் நகர்ந்து கொண்டிருக்கிறது, அடுத்த நிலையத்தில் இறங்குவேன்” என்று கூறி உள்ளேயே இருந்துள்ளார்.

சில நிமிடங்கள் கழித்து, மலசலகூடத்திலிருந்துஆடையில்லாமல் வந்து குறித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரின் வலது கையை முறித்து நுழைவாயிலில் தள்ளி, கைப்பிடியில் இருந்து வழுக்கவைத்து கீழே விழச்செய்துள்ளார். இந்த சம்பவம் கே.வி. குப்பம் ரயில் நிலையம் அருகே, காலை 11.30 மணிக்கு நடந்துள்ளது.

ரயில்வே பணியாளர்கள் உடனடியாக பெண்ணை மீட்டு, மதியம் 2.00 மணிக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்கள் கூறுகையில், “அவரின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது. 3-4 நாட்களில் முழுமையாக சிகிச்சை பெறுவார்” எனத் தெரிவித்தார்

குற்றவாளி ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 2024 – சென்னை சேர்ந்த 29 வயது பெண்ணை கொலை செய்த வழக்கில், சில மாதங்களுக்கு முன்பே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். 2022 – ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை மற்றொரு வழக்கில், ஒரு பெண்ணின் மொபைலை பறித்தபின், நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து தள்ளிவிட்டார்! மேலும், இவர் மீது இரண்டு முறை ‘குண்டாஸ் சட்டம்’ (Goondas Act) பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

GRP காவல் கண்காணிப்பாளர் டி.ஈஸ்வரன் உத்தரவின்படி, இரண்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன மற்றும் கே. ஹேமந்த்ராஜ் பூஞ்சோலை பகுதியில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் பெண்கள் தனியாக பயணம் செய்யும் போது எதிர்கொள்ளும் அபாயங்களை மீண்டும் நினைவூட்டுகிறது. பெண்கள் பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கைகள் அவசியம்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

வாழ்க்கையை உல்லாசப்பயணமாக மாற்றிய இருவர் – குழந்தை மரணம்-இறுதியில் சிறைக்கு வழி!

லண்டன் | ஜூலை 14:கொன்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் மார்க் கார்டன் ஆகியோர், “மிகவும் கவனக்குறைவான காரணத்தால்...

உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவின் ரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

BBC-உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவை ஒட்டியுள்ள சுமி நகரில் இடம்பெற்ற ரஷ்யாவின் கடும் தாக்குதலில் நால்வர்...

இன்றைய ராசி பலன் – 14 ஜூலை 2025 (திங்கட்கிழமை)!

இன்று உங்கள் மனதில் எழும் எண்ணங்களை நேர்மையாக செயல்படுத்த நீங்கள் வாய்ப்பு பெறலாம். பெரிய முடிவுகள்...

சீனாவின் அதிசய பலூன் கட்டிடம் – உலகத்தையே வியக்க வைத்த கண்டுபிடிப்பு!

சீனாவின் புதிய கட்டிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் இது முற்று முழுதாக பலூன் போன்ற அமைப்பை...