முள்ளிவாய்க்கால் முன்றலில் தமிழ் உணர்வாளர் அழகரெத்தினம் வனகுலராசா அவர்கள் சாகும் வரையான உணவு மற்றும் நீர் தவிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (14.02.2025) ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது தமிழ்த் தீ செய்திகளில் எதிர்பாருங்கள்
இணைப்பு -1
1. தமிழன் இல்லாத நாடுமில்லை தமிழனுக்கு என்று நாடும் இல்லை எனவே தமிழனுக்கு தனி அரசாங்கம் தேவை.
2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டும்.
3. மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
4. தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்.
5. உணவு மற்றும் ஏனைய பொருட்களின் விலை குறைத்து கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
6. பிரதேச வாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
7. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்காதவர்கள் இருந்ததாக கூறி வெளி நாட்டில் மற்றும் உள்நாட்டில் காரணம் காட்டி பணம் வாங்கி போராளிகளை ஏமாற்றி விட்டு சுற்றுலா விடுதி அமைத்தல், தோட்டம் பண்ணை வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கப்படுவதில்லை எனவே அடிப்படை சம்பளமாக அவர்களுக்கு ஒரு மணித்தியாளத்திற்கு 200 ரூபாய் படி மாற்றி சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
8. முதியோர் மற்றும் இளையோர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
9. காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி வீடு வழங்கப்பட வேண்டும்.
10. இலங்கையில் பிச்சை எடுப்பவர்கள் வீதம் அதிகரித்துள்ளது எனவே பிச்சை எடுப்பவர்கள் என்று இலங்கையில் எவரும் இருக்கக் கூடாது.
ஆகிய 10 அம்சங்களையே அழகரத்தினம் வனகுலராசா அவர்கள் முன் வைத்துள்ளார்
கருத்தை பதிவிட