முல்லைத்தீவு மாவட்டத்திலே முள்ளியவளைபகுதியில் முறிப்பு என்னும் கிராமத்தில் இன்று ஒரு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்ச்சியான சண்டையின் விளைவாக ஏற்பட்டது எனக் கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில், இரண்டு முஸ்லிம் இளைஞர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு முஸ்லிம் இளைஞருக்கு ஆதரவாக ஒரு தமிழ் இளைஞரும் கலந்து கொண்டுள்ளார். பின்னர், அந்த முஸ்லிம் இளைஞர் தப்பி ஓடியுள்ளார், ஆனால் தமிழ் இளைஞர் அவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
அவரை கட்டிவைத்து, கைக்கத்தியால் (காட்டுக்கத்தி) கைகளில் எட்டு முறை குத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர் மயக்கம் அடைந்த நிலையில், கைக்கத்தியால் அவரது தலையில் பாரிய வெட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு, அந்த இளைஞரை தூக்கிக் கொண்டு வந்து வீதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். மயக்கம் அடைந்த நிலையில், அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கே அவர் மரணம் அடைந்துள்ளார் என அயலவர்கள் தெரிவித்தனர்.
இறந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்தை பதிவிட