முகப்பு இலங்கை விவசாய சேதங்களுக்கு விரைவான நட்டஈடு – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு
இலங்கைசெய்திசெய்திகள்

விவசாய சேதங்களுக்கு விரைவான நட்டஈடு – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

பகிரவும்
பகிரவும்

மழை மற்றும் அனர்த்தங்களால் கடந்த காலத்தில் ஏற்பட்ட விவசாய சேதங்களுக்கு நட்டஈடு வழங்கும் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி இந்த உத்தரவை இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, விவசாயம், கால்நடைகள், நிலம் மற்றும் நீர்வள அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போது வழங்கியுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவுகளின் கீழ், விவசாயம், கால்நடைகள், நிலம் மற்றும் நீர்வள அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் சரியான முறையில் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

விவசாயத் தரவுகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக, தீர்மானங்கள் எடுக்கும் போது ஏற்படும் தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தார்.

விவசாய உற்பத்திகளுக்காக சந்தையில் நியாயமான விலை வழங்கி விவசாயிகளை பாதுகாப்பதுடன், நுகர்வோருக்கும் நியாயமான விலைகள் உறுதி செய்யப்பட வேண்டியது குறித்து இந்நிகழ்வில் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கால்நடை வள அபிவிருத்திக்கான நடவடிக்கைகள், ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் வளர்ச்சி, மில்கோ நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் பற்றிய விஷயங்களும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

இலங்கை காவல்துறையில் 28,000 பணியிடங்கள் காலி – விரைவில் 5,000 பேர் நியமிக்க நடவடிக்கை

கொழும்பு | ஜூலை 8, 2025:தற்போது இலங்கை காவல்துறையில் 28,000க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன...

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள்: விலை உயர்வின் பின்புலம் என்ன?

இலங்கையில் நடுத்தர வர்க்க மக்களின் வாகனம் கொள்வனவு செய்யும் கனவு எட்டாக்கனியாகவே உள்ளது. வாகனங்களின் விலைகள்...

விசா இல்லாமல் சீனாவுக்குள் – 74 நாடுகளுக்கான புதிய வாய்ப்பு!

சீனா தன் விசா விதிகளை தளர்த்தியதற்குப் பிறகு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வர ஆரம்பித்துள்ளனர்....

இன்றைய ராசிபலன் – 08.07.2025 (செவ்வாய்க்கிழமை)

இன்று சந்திரன்-செவ்வாய் சந்திப்பு, சிலருக்குத் தொழிலிலும் உறவுகளிலும் சிக்கல் தரலாம். நிதானம் தேவை. அதேசமயம் சூரியன்-சுக்ரன் கூட்டு...