இலங்கையில் தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த மொகமது அலி முகமது உஸ்மான் மற்றும் மொகமது ஃபாஹிம் ஃபாத்திமா சிஃபானா ஆகியோருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை, மார்ச் 6, 2025) மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், உயர்நீதிமன்ற நீதிபதி சுஜீவா நிசாங்கா இந்த தீர்ப்பை வழங்கினார்.
தத்தெடுத்த குழந்தையின் கொலை தொடர்பான இந்த வழக்கு, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை பிரதிபலிக்கிறது.
மாளிகாவத்தை பகுதியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி அல்லது அதனை ஒட்டிய காலகட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது
நீண்ட காலம் நீடித்த இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி சுஜிவா நிசாங்கா, பிரதிவாதிகளுக்கு எதிரான கொலைக் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படாமல் புதைக்கப்படவிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி நடத்தினர்.
தொடர்புடைய இடத்தில் விசாரணை நடத்தச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்து குழந்தையின் மரணத்திற்கு காரணத்தை அறிய உடற்கூறாய்வு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் மருத்துவ அறிக்கை குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருப்பதை காட்டுவதாக நீதிபதி கூறினார்.
கருத்தை பதிவிட