ஆக்கம் :- ராஜா
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பல்லின பண்பாடுகள் இலங்கையில் இருந்து வந்துள்ளன. ஏறக்குறைய 2500 ஆண்டு காலப்பகுதியில் பல பல்லினக் குழுக்கள் இணைந்து இரு பேரினக் குழுக்கள் ஆதிக்கம் பெற்றன. அவை சிங்கள இனக்குழு மற்றொன்று தமிழினக்குழு.


ஐரோப்பியர் ஆட்சியில் தமது படைவீரர்களாக இந்தோனேசியர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து மலாய் இனக்குழு ஒன்று இலங்கையில் தோற்றம் பெற்றது. இருபதாம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆட்சியில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்காக தென்னிந்திய தமிழர்கள் கொண்டுவரப்பட்டதை அடுத்து மலையக தமிழ் இனக்குழு ஒன்றும் உருவாகியது.
இக் குழுக்களில் பறங்கியர் என்ற இனக்குழு சிங்களவர் பகுதியில் சிங்கள இனக்குழுக்களுடனும் தமிழர் பகுதியில் தமிழ் இனக் குழுக்களுடனும் கலந்து தனது தனித்துவத்தை இழந்து மறைந்து வருகின்றது. அதுபோல மலையர் இனக்குழு பெரும்பாலும் மதரீதியான செல்வாக்கால் முஸ்லிம் என்ற இனக்குழுவுடன் கலந்து மறைந்து வருகின்றது.
கருத்தை பதிவிட