மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவின் தேவபுரம் மைதானம் அருகே உள்ள காட்டு பகுதியில், குப்பையில் வீசப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டது.
பொலிஸ் தரப்பில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, முறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில், இன்று காலை 9.00 மணியளவில், ஆண் குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதை பொதுமக்கள் கண்டே பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.
இதற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், நீதிமன்ற உத்தரவுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், குறித்த குழந்தை இன்று பிறந்ததற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அதனை உரைப்பையில் கட்டி கொண்டு வந்து குப்பையில் வீசி சென்ற தாயை கண்டுபிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.
கருத்தை பதிவிட