இன்று காலை, சிலாங்கூரின் ஷா ஆலம் நகரம், தாமான் அலாம் இந்தா பகுதியில் உள்ள கட்டிடப் பொருட்கள் சேமிப்பகமொன்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இலங்கையை சேர்ந்த ஒருவர் மற்றும் நாய் ஒன்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
மலேசிய செய்தியின் படி, ஷா ஆலம் பொலிஸ்நிலையப் பிரதி அதிகாரி ஏ.சி.பி மொக்த் இக்பால் இப்ராகிம் தெரிவித்ததாவது, 27 வயதுடைய அந்த நபர் சம்பந்தமான தகவல் காலை 10.51 மணியளவில் பெறப்பட்டதாகக் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் சம்பவ இடம் அந்த நபரது வசிப்பிடமாகவும் இருந்து வந்தது தெரியவந்தது. அவரின் அருகில் இருந்த நாய் ஒன்றும் அதேபோன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும் பொலிஸார் அந்த உடலுக்கு அருகே சென்று பரிசோதனை நடத்துவதற்காக டெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஊழியர்கள் மின் இணைப்பை துண்டிக்கும் வரையிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
உயிரிழந்தவரின் உடலில் எவ்விதக் காயங்களோ அல்லது தாக்குதலுக்கான அறிகுறிகளோ காணப்படவில்லை. அவரின் உடல் கிளாங் நகரில் உள்ள தெங்கு ஆம்புவான் ரஹீமா மருத்துவமனைக்கு உடற்கூற்று ஆய்வுக்காக பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
கருத்தை பதிவிட