மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், புதிதாக திருமணமான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம், சந்திவெளி பிரதான வீதியில் சந்தை முன்பாக மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், சந்திவெளியை சேர்ந்த 27 வயதுடைய வடிவேல் மோகன்சாந்தன் என்பவராவார். கடந்த 9 நாட்களுக்கு முன்னரே திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இவர், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளார்.
மற்றொரு இளைஞர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக சேவைகள் மற்றும் கிராம நிகழ்வுகளில் சிறுவயதிலிருந்து ஈடுபாடுடன் செயல்பட்டு வந்த மோகன்சாந்தன், இன்று இரவு நடக்கவிருந்த கரப்பந்தாட்ட போட்டிக்காக உணவு கொள்வனவு செய்ய வந்த போதே இந்த துயரகரமான விபத்தில் சிக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சந்திவெளி பொலிஸார் சம்பவத்துக்கு தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம், அவரது குடும்பத்தினரையும், நண்பர்கள் மற்றும் சந்திவெளி கிராம மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்தை பதிவிட