இந்த நாட்டின் பொதுமக்களுக்கு, மிகவும் புனிதமான தலதா புனித தந்ததாதுவை நேரில் பார்வையிட்டு வழிபடுவதற்கான அரிய வாய்ப்பை வழங்கும் வகையில், 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடைபெறும் “சிறி தலதா வந்தனாவ” என்ற நிகழ்வு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் பங்கேற்புடன் நேற்று (ஏப்ரல் 18) ஆரம்பமாகியது.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வைச் சுட்டிக்காட்டும் வகையில், தலதா புனித தந்தத்திற்கு முதற் பூசனை ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி தலதா சமிதுனை வணங்கி வழிபட்டதன் மூலம், பக்திசாலியான மக்களுக்கும் வழிபடும் வாய்ப்பு வழங்கப்பட்டு, “சிறி தலதா வந்தனாவ” நிகழ்வு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வேண்டுகோளின்படி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா நாயக்கர் திருவடிகளின் அனுஷாஸனையும், மகனுவரை தலதா மாளிகையின் தியவாடன நிலமே அவர்களின் வழிகாட்டலின் கீழும், இந்த நிகழ்வு ஏப்ரல் 27ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
நேற்று (ஏப்ரல் 18) தலதா தந்ததாதுவை வணங்குவதற்காக, தீவின் பல பக்கங்களிலிருந்தும் மகத்தான மக்கள் கூட்டம் தளதா மாளிகைக்கு வந்திருந்தனர்.
நேற்று மாலை 5.00 மணி வரை பொதுமக்களுக்கு தளதா சமிதுனை வணங்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இன்று (ஏப்ரல் 19) முதல், தினசரி மதியம் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மக்கள் வழிபடலாம்.
கருத்தை பதிவிட