கண்டி ‘காஜி நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் இன்று (ஏப்ரல் 21) காலை லஞ்சம் அல்லது உள்ளல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் (CIABOC) ஆல் ஊழல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர், கண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டின் படி, குறித்த நீதிபதி, அந்த தொழிலதிபரின் மகன் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கி, தீர்ப்பு பிரதியையும் விவாகரத்து சான்றிதழையும் வழங்க வேண்டும் என்பதற்காக ரூ. 200,000 ஊழல் தொகையை, வழக்கில் உள்ள தரப்புகளிடமிருந்து கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தீர்ப்பு வழங்கி, தீர்ப்பு பிரதியையும் விவாகரத்து சான்றிதழையும் வழங்குவதற்காக ஊழல் கேட்டதாக கூறப்படும் சந்தேக நபர், கண்டி நீதிமன்ற வளாகத்தில் உள்ள காஜி நீதிமன்றத்தில் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கருத்தை பதிவிட