முகப்பு உலகம் போலீசாரின் தொடையில் பலமுறை கடித்த நபருக்கு 5400 பிராங்குகள் அபராதம்!
உலகம்செய்திசெய்திகள்

போலீசாரின் தொடையில் பலமுறை கடித்த நபருக்கு 5400 பிராங்குகள் அபராதம்!

பகிரவும்
பகிரவும்

ஸ்விட்சர்லாந்தின் வொல்லெராவ் (Wollerau) என்ற பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றின் காரணமாக 42 வயதுடைய ஒருவர் தற்போது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார். போலீசாரை எதிர்த்த வன்முறை மற்றும் அச்சுறுத்தலுக்கு இணையாக அவர் மீது அரசுத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த சம்பவம் 2024 ஆகஸ்ட் மாதம் ஒரு சனிக்கிழமையன்று பிற்பகலில் நடைபெற்றது. குறித்த நபர் அவரது குடியிருப்பில் கோபமாக இருந்து மரத்தளபாடங்களை சேதப்படுத்தியதாக அவரது தந்தையால் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

ஆரம்பத்தில் அந்த நபரை அவர்கள் சமாதானப்படுத்த முடிந்தது. ஆனால் சில நேரத்துக்குப் பிறகு, அவர் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து போலீசாரை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டார். அவர் தனது முழங்காலால் பெண் போலீசாரை அடிக்க முயன்றதோடு, மிரட்டல்களும் விடுத்தார்.

அவரை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் அவரை தரையில் கீழே கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவானது. ஆனால் அப்போதும் அவர் தாக்குதல் தொடர்ந்தார். அவர் பெண் போலீசாரை உதைத்து  ஆண் போலீசரின் தொடையில் பலமுறை கடிக்க முயன்றார்.

இந்த சம்பவத்திற்கு நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதற்காக அவர் 5400 பிராங்குகள் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...