முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் 24.04.2025 விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், கேப்பாபிலவு கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள இரண்டு வேட்பாளர்களுடன் இணைந்து, கிராமத்தில் உள்ள சீரமைக்கப்பட வேண்டிய வீதியை பார்வையிட அவர் சென்றிருந்தார்.
அந்த நேரத்தில், கேப்பாபிலவின் கடற்றொழில் சங்கத் தலைவர் செபார்சியாம்பிள்ளை சுகிர்தன் அவர்களையும் அழைத்து, குறித்த வீதியை விரைவில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். ஆனால், அந்த இடத்தில் இருந்த சில கிராம மக்கள் மற்றும் கடற்றொழில் சங்கத் தலைவர் , இதுபோன்று முந்தைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தேர்தல் காலத்தில் வந்து, இதே வீதியை சீரமைப்பதாக வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தனர்.
வீதி பார்வைக்காக சென்ற போது அமைச்சரின் வாகன ஓட்டுநர் ஒருவர், கடற்றொழில் சங்கத் தலைவர் சுகிர்தனின் முதுகில் சப்பாத்துக் காலால் உதைத்து தாக்குதல் நடத்தினர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு சிறிய அளவிலான கலவரம் ஏற்பட்டு, கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு கூடியுள்ளனர்.
அமைச்சர் சந்திரசேகரன், சம்பவ இடத்திலிருந்து விரைவாக வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம், “புதிய அமைச்சர்களும் பழையவர்களைவிட வித்யாசமில்லை” என்ற மக்கள் வருத்தத்தையும், நம்பிக்கை இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்தை பதிவிட