2024 ஆம் ஆண்டிற்கான உயர் தர (A/L) பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 177,588 மாணவர்கள் பல்கலைக்கழகச் சேர்க்கைக்குத் தகுதியானதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மொத்தம் 274,361 பரீட்சார்த்திகள் — இதில் 222,774 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 51,587 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் — இந்த பரீட்சையில் பங்கேற்றனர்.
இதுவரை 177,588 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சேர்க்கைக்கு தகுதிபெற்றுள்ளனர்.
அதேவேளை, 420 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 36 தனிப்பட்ட பரீட்சார்த்திகளை உள்ளடக்கிய 456 பேரின் பரீட்சை முடிவுகள் விசாரணை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது பரீட்சை முடிவுகளைப் பார்வையிட www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய அதிகாரப்பூர்வ இணையத்தளங்களுக்கு சென்று தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
மேலும், பரீட்சை முடிவுகளுடன் தொடர்புடைய எந்தவொரு புகார்களும் அல்லது திருத்தங்களும் இருப்பின், மாணவர்கள் தங்களது பாடசாலைகளின் மூலமாக அல்லது நேரடியாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளலாம்.
அதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விரைவில் மாணவர்களுக்கான உயர் கல்விப் பயணத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்தை பதிவிட