முகப்பு இலங்கை மே தின பேரணி அறிவிப்பு – அரசை கடுமையாக விமர்சித்த வடக்கின் தொழிற்சங்கங்கள்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

மே தின பேரணி அறிவிப்பு – அரசை கடுமையாக விமர்சித்த வடக்கின் தொழிற்சங்கங்கள்

பகிரவும்
பகிரவும்

“காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசுகள் தொழிற்சங்கங்களைத் தமது தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை. அதேபோன்றே அநுர தலைமையிலான அரசும் கடந்த கால அரசுகள் போலவே எம்மைத் தமக்கான பொம்மைகளாகப் பயன்படுத்த முனைகின்றது.” – என்று வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அங்கு சம்மேளனத்தினர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கடந்த 4 ஆண்டுகளாக மே தினத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், இம்முறை நல்லூர் முன்றலில் இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி ஆரியகுளம் சந்தி வழியாகச் சென்று, ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் ஊடாக யாழ். மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்து, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாம் இம்முறை 12 தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.” – என்றனர்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் மே தின பேரணிகள்!

இன்று மே 1, 2025, இலங்கையில் சர்வதேச தொழிலாளர் தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. அரசியல்...

வவுனியாவில் வாக்காளர் அட்டைகள் மீட்பு : ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஆளும் தரப்பின் செயல்பாடுகள்?

வவுனியா – ஏப்ரல் 29, 2025: வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வியாபார நிலையத்திலிருந்து...

பிரிட்டனின் தலையீடு உலகத்தை மூன்றாம் உலகப் போருக்கு இழுக்கும் அபாயத்தில் – ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை!

பிரிட்டனின் தலையீடு உலகத்தை மூன்றாம் உலகப் போருக்கு இழுக்கும் அபாயத்தில் – ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை...

ஐபிஎல்லில் 14 வயதில் சதம் அடித்த வைபவ் – பரிசு தொகையை அறிவித்த பீஹார் முதல்வர்

ஜெய்ப்பூர் – ஏப்ரல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், இளம்...