முகப்பு இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கான அனர்த்தக் கடன் தொகை அதிகரிப்பு – மே 1 முதல் நடைமுறைப்படுகிறது!
இலங்கைசெய்திசெய்திகள்

அரசாங்க ஊழியர்களுக்கான அனர்த்தக் கடன் தொகை அதிகரிப்பு – மே 1 முதல் நடைமுறைப்படுகிறது!

பகிரவும்
Rich man holds in his hands and counts several thousand rupees of various denominations to pay for rent of house. Close up.
பகிரவும்

அரசாங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரசாங்க ஊழியர்களுக்கான அனர்த்தக் கடன்களை வழங்கும் நடைமுறைகளில் புதிய திருத்தங்களை கொண்டுவரும் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய சுற்றறிக்கை 2025 மே 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசாங்க ஊழியர்கள் பெறக்கூடிய அதிகபட்ச அனர்த்தக் கடன் தொகை ரூ. 2,50,000 இலிருந்து ரூ. 4,00,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், 2025 அரச வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண முதன்மை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிள்ளைகளை அடிப்பதற்கு எதிரான சட்டமூலம் பெரும்பான்மையுடன் வெற்றி

ஜெனீவா – மே 10, 2025சுவிஸ் நாடாளுமன்றத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிப்பதை தடுக்கும் வகையில்...

பிரபல டீச்சர் அம்மா கைது – இளைஞனை தாக்கியதாக குற்றச்சாட்டு!

 நீர் கொழும்பு  – மே 10, 2025 5ஆம் தர மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வரும்,...

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம்: பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு உள்ளாசிரியர் கட்டாய விடுப்புக்கு அனுப்பப்பட்டார் – கல்வி அமைச்சு நடவடிக்கை

கொழும்பு – மே 10, 2025 கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவரின் மரணத்துக்குத் தொடர்புடையதாகக் கூறப்படும்...

ஹெலிகொப்டர் விபத்து: ஆறு பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு!

இன்றுக்காலை, மாதுறுஓயா நீர்தேக்கத்தில் நடைபெற்ற “பாஸிங் அவுட்” விழாவிற்கான காணொளிக் காட்சியில் பங்கேற்ற இலங்கை விமானப்படையின்...