முகப்பு இலங்கை இன்றைய பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
இலங்கைசெய்திசெய்திகள்

இன்றைய பேருந்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பகிரவும்
பகிரவும்

இன்று (மே 11) காலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில், ரம்போட பகுதியில் உள்ள கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலிருந்து விலகி பள்ளத்தாக்கிற்கு கீழே வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவதாக ஆரம்ப கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 25 பேர் மேல் நுவரெலியா மற்றும் கொத்மலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையும் உறுதி செய்யப்படவில்லை.

இவ்விபத்துக்குள்ளான பேருந்து இலங்கை போக்குவரத்து சபையினைச் சேர்ந்ததாகவும், அது கதிர்காமம் முதல் குருநாகல் நோக்கி நுவரெலியா வழியாக பயணித்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

டீச்சரம்மா பிணையில் விடுதலை. பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவினர்கள் அமைதி போராட்டம்!

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பிரபல வகுப்பு ஆசிரியராக அறியப்படும்...

வாகன இறக்குமதியில் உள்ள பிரச்சனை என்ன?

இலங்கையில் தற்போது வாகன விற்பனையாளர்கள், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை உயர் நிலையில் இருந்தாலும், புதிய...

2025.05.11 – கொரளிசில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக விசாரணை குழு நியமனம்!

2025 மே 11 ஆம் திகதி அதிகாலை,   கொரளிஸிலுள்ள றெடியாய்ல பகுதியில் இடம்பெற்ற பயணிகள் பேருந்து...