யாழ்ப்பாணத்தில் விபத்து பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய அனிஸ்ரன் பலி
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் ஏற்பட்ட விபத்தில் கடுமையாக காயமடைந்த இளைஞர் ஒருவர், பல தினங்கள் சிகிச்சை பெற்றும் உயிர் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து கடந்த மே 11ஆம் திகதி இடம்பெற்றது. அனிஸ்ரன் மற்றும் அவரது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில், முன்னோக்கி சென்ற வாகனத்தை முந்த முயன்ற போதையே, எதிரே இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளனர்.
இந்த மோட்டார் வண்டி விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் குணமடைந்து வீடு திரும்பியதுடன், அனிஸ்ரன் பலத்த காயங்களுடன் தொடர்ந்தும் சிகிச்சையில் இருந்தார்.
அவரது நிலைமை கடந்த சில நாட்களாக மோசமாகிய நிலையில், நேற்று திங்கட்கிழமை (19) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய திடீர் மரண விசாரணைகளை நமசிவாயம் பிறேம்குமார் தலைமையிலான மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்தை பதிவிட