முகப்பு இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் – 79 பேருக்கு பதவியுயர்வு!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

வரலாற்றில் முதன்முறையாக 3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் – 79 பேருக்கு பதவியுயர்வு!

பகிரவும்
பகிரவும்

வரலாற்றில் முதன்முறையாக 3,147 புதிய தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் – 79 பேருக்கு பதவியுயர்வு

இலங்கை தாதிய சேவையின் வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் 3,147 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (24) கொழும்பு டெம்பிள் ட்ரீஸ் மண்டபத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தலைமை அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் டொ. ஹரிணி அமரசூரிய தலைமையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொ. நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றியபோது, “இது இலங்கையின் தாதிய சேவையில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரும் நியமனமாகும்,” எனக் கூறினார்.

மேலும், இதே நிகழ்வின் போது 79 சிறப்பு தரச் செவிலிய அதிகாரிகளுக்கு பதவியுயர்வுகளும் வழங்கப்பட்டன.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொ. அனில் ஜாசிங்க உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ்வாறு பெருமளவிலான நியமனங்களும் பதவியுயர்வுகளும் வழங்கப்படுவது, நாட்டின் சுகாதார அமைப்பின் வலிமை மற்றும் சேவையின் மேம்பாட்டை நோக்கிக் கொண்டுசெல்லும் முக்கிய கட்டமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போதைப்பொருள் வலையமைப்புக்கு அரசியல் பாதுகாப்பு இல்லை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

போதைப்பொருள் அச்சுறுத்தலின் பலியாக குழந்தைகள் மாறுவதைத் தடுக்கப்பட வேண்டியது தமது முதன்மை இலக்காக இருப்பதாகவும், எந்த...

இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் தீவிரம்: 12 மணி நேரத்தில் 33 பேர் பலி!

காசாவின் தெற்கு நகரமான காண்யூனிஸில் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இஸ்ரேலிய இரு வான் தாக்குதல்களில் ஐந்து...

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...