முகப்பு இலங்கை வடமாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம்: அனுமதியின்றி நடவடிக்கை – ஆசிரியர் சங்கம் கண்டனம்!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

வடமாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம்: அனுமதியின்றி நடவடிக்கை – ஆசிரியர் சங்கம் கண்டனம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் – 27 மே 2025: வடமாகாண கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட 2024/2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்கள், உரிய அனுமதியின்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இடமாற்ற சபை உறுப்பினர் சோ. காண்டீபராசா தெரிவித்துள்ளார்.

2025 மே 26ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமாறு அறிவிக்கப்பட்ட இவ்விடமாற்ற நடவடிக்கைகள், இடமாற்ற சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இது நடைமுறை தவறுகளுக்கிடையே பல்வேறு சர்ச்சைகளுக்கு தளமளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று (26.5.2025) ஊடகங்களுக்கான அறிக்கையொன்றை வெளியிட்ட காண்டீபராசா, ஆசிரியர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு இடமாற்றங்கள் சீராக்கப்படும் வரை, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கால அவகாசங்களை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கமும், இந்த இடமாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.

“எமது முன்மொழிவுகள் பார்வையிடப்படாமலும், இடமாற்ற சபையின் ஆலோசனைக்குப் பிறகும் மேன்முறையீட்டு சபையின் பரிந்துரைமுமின்றி மேற்கொள்ளப்பட்ட இவ்விடமாற்றங்கள் முறையற்றதாகும்” என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், 2025 மே 30க்குள் “சான்றிதழ் வழங்கக்கூடாது” என வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை ஏற்க மறுத்திருப்பது தொழில்சங்கங்களின் கண்டனத்துக்கு இடமளித்துள்ளது.

“வலயக் கல்வி அதிகாரிகளின் வக்கிர செயல்முறைகள் தொடருமானால், தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாக மாறும்” என இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.

மூலம்: ஆசிரியர் சங்க ஊடகவியல் அறிக்கை, 26.5.2025

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...