முகப்பு இலங்கை ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!
இலங்கைகல்விசமூகம்செய்திசெய்திகள்

ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!

பகிரவும்
பகிரவும்

இன்று  (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய அமைதி முறையிலான போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இந்தப் போராட்டமானது வட மாகாண ஆசிரியர்களுடைய இடமாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு போராட்டமாகும்

பல நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றி போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர் ஆசிரியர் இடமாற்றத்தினை ஒரு ஒழுங்கு முறையில் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அதிகாரிகளுக்கு எதிராகவும் எல்லா ஆசிரியர்களையும் ஒரே விதமாக பார்க்கும் படியும் கோரிக்கை விடுத்தனர்

அதிகாரிகளே உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள் ஆசிரியர்கள் தங்கள் பணியை தாங்கள் செய்வார்கள்

ஆசிரியர்கள் அதிகாரிகளை கேட்டா திருமணம் செய்ய வேண்டும்?

ஆசிரியர் தரவுகளை ஒழுங்காக இற்றைப் படுத்து.

இடமாற்றக்  கடிதத்தில் காலத்தை வரையறை செய்.

எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்

அதிகாரிகளே நாட்டின் இனப்பெருக்கத்தை குறைக்காதே

போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதை களை அவர்கள் தாங்கியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

போராட்டத்தின் இறுதியில் கௌரவ ஆளுநருக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...