ஜெர்மனிய கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை ஜெர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier) அவர்கள் இன்று (11) பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் உளமார்ந்த வரவேற்புடன் வரவேற்றார்.
ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள் பெல்வீவ் மாளிகைக்கு வருகைதந்தபோது, ஜெர்மன் முப்படை அணியினரால் அரச மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இதன்போது ஜனாதிபதி அவர்கள் அணிவகுத்திருந்த முப்படை அணியின் மரியாதை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இரு ஜனாதிபதிகளுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இப்பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, தொழில் பயிற்சி மற்றும் சுற்றுலா துறை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இருதரப்பும் விசேட கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்தை பதிவிட