முகப்பு இலங்கை முல்லைத்தீவில் கடைத்தொகுதி தீப்பற்றி எரிகிறது – மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

முல்லைத்தீவில் கடைத்தொகுதி தீப்பற்றி எரிகிறது – மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள்!

பகிரவும்
பகிரவும்

முல்லைத்தீவு – ஜூன் 16:
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதியில் உள்ள பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பல கடைகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீயின் பரவல் தொடர்ந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படும் விஷயம், பலத்த காற்று வீசும் சூழ்நிலை. அதனால்தான் தீப் பரவல் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. தீச் சுவாலைகள் பல மடங்கு தாண்டி காற்றில் பறந்து செல்லும் விதத்தில் பரவல் நடக்கின்றது.

மக்கள் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பிற்காக மிக மிக அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தீயணைப்பு துறையின் பிரிவு முல்லைத்தீவில் இல்லாததால், இவ்விசேட சூழ்நிலையில் இராணுவத்தின் உடனடி உதவி நாடப்பட்டுள்ளது. தற்போது, படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...