முகப்பு உலகம் மெதுவாக ஓட்டும் ஓட்டுநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தீர்மானம்!
உலகம்செய்திசெய்திகள்

மெதுவாக ஓட்டும் ஓட்டுநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – சுவிட்சர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தீர்மானம்!

பகிரவும்
பகிரவும்

சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வால்டர் கார்ட்மான், வீதிகளில் தேவையற்ற வகையில் மிக மெதுவாக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனக் கோரி, நாடாளுமன்றத்தில் புதிய தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

அவரது விளக்கத்தின் பேரில்,

  • போக்குவரத்து பாதுகாப்பை அதிகரித்தல்,

  • அபாயகரமான முறையில் ஓவர்டேக் செய்வதை குறைத்தல் மற்றும்

  • போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் போன்ற பலன்களைப் பெற,
    பரிந்துரைக்கப்பட்ட வேக எல்லைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தத் தீர்மானம் சட்டமாக மாறுமானால், எதிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் வீதிகளில் ஓட்டுநர்கள் விரைவாக மட்டுமல்ல, சரியான வேகத்தில் ஓட்டுவதும் கட்டாயமாகும் என நம்பப்படுகிறது.

“முக்கிய வீதிகளில் சிலர் ஆமைபோல் மெதுவாக வாகனங்களை ஓட்டுவதால், போக்குவரத்து இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. இது இனிமேல் தொடரக்கூடாது,” என அவர் தனது தீர்மானத்தில் குறிப்பிடுகிறார்.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், சுவிட்சர்லாந்தின் வீதிகளில் சீரான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...