முகப்பு இலங்கை நியூயோர்க் டைம்ஸில் இடம்பிட்ட இலங்கையின் நவநீல ரத்தினம் – ‘Ceylon Sapphire’ க்கு உலகப் புகழ்
இலங்கைஉலகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

நியூயோர்க் டைம்ஸில் இடம்பிட்ட இலங்கையின் நவநீல ரத்தினம் – ‘Ceylon Sapphire’ க்கு உலகப் புகழ்

பகிரவும்
பகிரவும்

ஶ்ரீலங்காவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நீல ரத்தினம் தொடர்பான அறிவிப்பு கடந்த 27ஆம் திகதியன்று ‘The New York Times’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரத்தினம் அதன் நிறம், பருமன் மற்றும் இயற்கையான தன்மை காரணமாக உலகளாவிய கவனத்தை பெற்றுள்ளது.

அறிவிப்பில் தெரிவிக்கப்படுவதாவது, இந்த நீல ரத்தினம் இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். இதன் எடை 9.15 கரட் ஆகும்.

ராயல் ப்ளூ (Royal Blue) நிறத்தில் காணப்படும் இந்த ரத்தினம் Cushion-cut வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் விலை அமெரிக்க டொலர் $178,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாவில் 53,369,562.00 பெறுமதியானது என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உலகின் முக்கியமான ரத்தினங்கள் மற்றும் நவரத்தின வர்த்தக செய்திகளுக்கான பிரிவில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான அறிவிப்புகள் இலங்கையின் ரத்தினத் துறைக்கு நம்பிக்கை மற்றும் முதலீட்டுகளை ஈர்க்கும் என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நீல ரத்தினம் தற்போது ‘சிலோன் சேஃபையர் (Ceylon Sapphire)’ என உலகெங்கும் புகழ்பெற்றுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...