சுவிஸின் சூரிச் மாவட்டத்தில் உள்ள எபெறெற்றிக்கோன் கிராமத்தில் இன்று இடம்பெற்ற தீ விபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற வீடு, பாரிய அளவிலான தீயால் முழுவதுமாக கருகி அழிந்துள்ளது.
தீவிபத்துக்குப் பின்னரே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீரை பீச்சியடித்து தீயை கட்டுப்படுத்தியதுடன், தீ பரவுவதைத் தடுத்து நிறுத்தினர்.
சம்பவத்துக்கான முக்கியக் காரணமாக கடும் வெப்பநிலை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக வீட்டின் கூரையில் ஏற்பட்ட தீப்பற்றல், குறுகிய நேரத்திலேயே முழு வீடிற்கும் பரவியுள்ளது.
சம்பவத்தின்போது சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருந்து இந்த தீ விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வே.கேசவன் தனது Facebook தளத்தில் தெரிவித்ததாவது:
“வீடில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. எங்கள் இடத்திலிருந்தே அதன் வெப்பத்தை உணர முடிந்தது. அது மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது.” என்றார்.
தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது முதல் தகவல்.
கருத்தை பதிவிட