முகப்பு அரசியல் 2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

பகிரவும்
பகிரவும்

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். நாடளாவில் தொழிற்பயிற்சி நிலையங்களை மையமாகக் கொண்டு, “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட “ஸ்ராம மெஹியும” (Shrama Meheyuma) எனும் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பவிழாவில்  கலந்து கொண்டபோதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.தொழிற்பயிற்சிக்கு இதுவரை போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும், எதிர்காலத்தில் இது நாட்டின் முக்கிய  துறையாக மாறும் என்றும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரும் முதலமைச்சருமான டொக்டர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் மூலம் தொழிற்பயிற்சி துறைக்கு அதிக கவனம் பெறும் வகையிலான ஓர் ஆரம்பத்தை ஏற்படுத்தவுள்ளோம். தொழிற்பயிற்சியின் மதிப்பையும், அவசியத்தையும் நாடு முழுவதும் எடுத்துரைக்கவே இது உந்துதலாக அமையும். எதிர்காலத்தில் தொழிற்பயிற்சி துறையே நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய தீர்மானத் துறையாக மாறும். வேலை சந்தைக்கு தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்கும் பணி கல்வி அமைச்சின் வழியே நடைபெறுகின்றது. ஆனால் பெரும்பாலான மக்களும் நாடும் கூட, அந்தத் துறையினைப் பொருத்தவரை போதிய கவனமோ மதிப்போ தருவதில்லை.

இப்போது சமுதாயத்தில் பலர் ‘டெக்’ (தொழில்நுட்பம்) என்றாலே, “இல்லாமல் போனவங்க, பல்கலைக்கழகத்துக்கு போக முடியாதவங்க போன இடம்” என்ற அபிப்பிராயம்தான் உண்டு. அல்லது மற்ற வாய்ப்புகள் கைவிட்டபின் கடைசி இடமாக பார்க்கப்படுகின்றது. அது தவறான, சமூகத்தில் ஆழமாக பதிந்திருக்கும் எண்ணமே. ஆனால் உண்மையில், தொழிற்பயிற்சி என்பது அறிவார்ந்த ஒரு தேர்வாகவே இருக்க வேண்டும். அது நாட்டு வளர்ச்சிக்கும், தனிநபரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் மிகவும் இன்றியமையாதது.

தொழிற்பயிற்சி கற்க வேண்டும் என்பதே ஒருவர் எடுத்துக் கொள்ளும் ஒரு புத்திசாலி தனமான தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஒருபோதும் இறுதிப் பரிகாரம் போலவோ, அறியாமையாலோ அல்லது சில நேரங்களில் நிம்மதிக்காக எடுக்கப்படும் தீர்மானமாகவோ இருக்கக்கூடாது. அது தனது திறமையும், விருப்பங்களையும், உலகத்தைப் பற்றிய பார்வையையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு முக்கியமான தீர்மானமாக இருத்தல் வேண்டும்.

இதனால் 2026ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ள கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பான இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி மறுசீரமைப்பு என்பது சாதாரண பாடத்திட்ட மாற்றமல்ல அது ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும் திட்டமாகும்.

பாடசாலையிலேயே தொழிற்பயிற்சி ஒன்றை ஒருங்கிணைக்கும் திட்டத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிற்குத் தேவையான, நவீன திறமைகள் கொண்ட மனிதவளத்தை உருவாக்கி, அந்த மனிதவளத்தை மேம்படுத்தும் மறுமலர்ச்சி காலத்துக்கான அடித்தளத்தை உருவாக்குவதே எங்களது நோக்கமாகும்.” என டொக்டர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...