முகப்பு அரசியல் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்! பிள்ளையான் குழுவிற்கு அரசாங்கம் ஊதியம் வழங்கியது?
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தீவிரம்! பிள்ளையான் குழுவிற்கு அரசாங்கம் ஊதியம் வழங்கியது?

பகிரவும்
பகிரவும்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணை மேலும் விரிவடையத் தொடங்கியுள்ளது. இப்போது இராணுவ புலனாய்வு அதிகாரியான மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது வெளிநாட்டு பயணங்களைத் தடுக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக புறப்பட முடியாத என்கிற கட்டளைச் சுற்றறிக்கை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசாத் மௌலானா வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் பிள்ளையான் ஹபரணை பகுதியில் தங்குமாறு சுரேஸ் சாலே ஏற்பாடு செய்ததாகவும் அதனை சாலே நேரடியாக கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் எனது பணியிடத்திலும் மாற்றம் வரக்கூடும். சம்பளமும் ஒரே தொகையாக வழங்கப்படாமல் இருக்கலாம்” என சாலே கூறியதாகவும் மௌலானா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் முன்னாள் நல்லாட்சி ஆட்சியில் பிள்ளையான் குழுவிற்கு அரசாங்கம் ஊதியம் வழங்கியதையும் அந்தக் குழு துணை ஆயுதக்குழுவாக செயல்பட்டதையும் அசாத் மௌலானாவின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடருகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

எருசலேமில் துப்பாக்கிச் சூடு : ஆறு பேர் பலி – 20 பேர் காயம்!

எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்...

‘ஐஸ்’ இரசாயன வழக்கில் புதுப்புது சான்றுகள் – மிட்தெனியாவில் காவல் உபகரணங்கள் மீட்பு!

மிட்தெனியாவில் புதைக்கப்பட்ட காவல் உபகரணங்கள் மீட்பு : ‘ஐஸ்’ இரசாயன வழக்குடன் தொடர்பு மிட்தெனியா தலாவ...

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பதுளை, செப்டம்பர் 05: இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து,...

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...