2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடளாவிய அளவில் நடைபெறவுள்ளது. இந்த பரீட்சை 2,787 நிலையங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சையின் இரண்டாம் பகுதி (Paper II) காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதல் பகுதி (Paper I) காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் தரவுகளில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமெனில், ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 04 வரையிலான காலப்பகுதியில் அவற்றைச் செய்யலாம் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள் மற்றும் பரீட்சை தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற, பரீட்சை திணைக்களத்தின் இணையதளமான https://onlineexams.gov.lk/eic ஐ பார்வையிடலாம்.
மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்: 011-2784537, 011-2786616, 011-2784208, 011-2785413 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்தை பதிவிட