கல்வி நெறித் திட்ட மாற்றங்களின் கீழ், ஒரு பாடநேரம் 45 நிமிடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கமுன் இருந்த 15 நிமிடப் பாடநேரத்துடன் ஒப்பிடும் போது, 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றம், பாடங்கள் அவசரமின்றி கற்பிக்கப்படுவதற்கும், மாணவர்கள் குழு ஆராய்ச்சி, விதிவிலக்கான செயற்பாடுகள், செயல்திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டப்படி, பாடசாலை நேரத்தை காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், போக்குவரத்து மற்றும் பிற நடைமுறைக் கருத்துக்களை பரிசீலனை செய்த பிறகு, பாடநேரத்திற்கு மட்டும் 30 நிமிடம் அதிகரிப்பு செய்து இம்மாற்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கருத்தை பதிவிட