யாழ்ப்பாணம் மெரிஞ்சிமுனை – நாரயம்பதி பகுதியில் அமைந்துள்ள மாதா கோயிலின் சுரூபம், நேற்று இரவு மதுபோதையில் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தீவக அமைப்பாளர் வேலணைச் சேர்ந்த வேல்முருகன் மயூரன் உட்பட 8 பேர், ஊர்காவற்றுறை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் மாதா சுரூபத்தை முற்றிலும் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கோயில் நிர்வாகத்தினர் வழங்கிய புகாரை தொடர்ந்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக பல தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. மதுபண்பாட்டு சுதந்திரம், சமாதானம் மற்றும் மதநம்பிக்கைகளின் மீதான கண்ணியத்தை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டத்தின் முழு பலத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகக் கோரிக்கை ஆகும்.
கருத்தை பதிவிட