ஒரு பாடசாலை ஆசிரியையான தனது மனைவியுடன் இருந்ததை மறைமுகமாகப் வீடியோ பதிவு செய்த அந்தரங்க வீடியோக்களை, ஆசிரியையுடைய மாணவரிடம் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகக் கூறப்படும் சந்தேகநபரான கணவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நேற்று (திங்கள்) கொழும்பு கூடுதல் நீதிமன்ற நீதிபதி கசுன் கஞ்சனா திசாநாயக்கஉத்தரவிட்டார்.
இந்த உத்தரவு, பாதிக்கப்பட்ட ஆசிரியையால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, காவல் துறை சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் செய்த விளக்கங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டது.
விசாரணைகளில், சந்தேகநபர் வழமையாக விரும்பத்தகாத படங்களைக் பார்ப்பதில் ஆழ்ந்த அடிமைத்தனத்தில் உள்ளவராகவும், சமீபத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறையடுத்து பழிவாங்கும் நோக்கில் மனைவியின் மாணவரிடம் அந்த வீடியோவை அனுப்பியிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சந்தேகநபர் ஆழ்ந்த மன அழுத்தத்தில் (டிப்பிரஷன்) உள்ளதாகவும், இது அவரது ஆபாசக் வீடியோக்கள் பார்ப்பதற்கான அடிமைத்தனத்தால் ஏற்பட்ட உளவியல் சிக்கலாக இருக்கலாம் எனவும் நீதிமன்றத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளக்கங்களை பரிசீலித்த நீதிபதி, சந்தேகநபரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல் துறையினருக்கு கட்டளையிட்டார்.
கருத்தை பதிவிட