31 ஜூலை 2025 – உலக வானிலை அமைப்பு (WMO) மின்னலின் உலகசாதனையை அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று அமெரிக்காவின் பெரிய புயல் மண்டலத்தில் உருவான ஒரு மின்னல் தாக்கம் உலகின் மிக நீளமான ஒற்றை மின்னல் தாக்கமாக பதிவாகியுள்ளது. இந்த மின்னல் தாக்கம் 829 கிலோமீட்டர் (515 மைல்கள்) நீளத்துடன் உலக சாதனையை நிறுவியுள்ளது.
இந்த சாதனை உலகளவில் மின்னல் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, எதிர்காலத்தில் மனித உயிர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக அமைவதுடன் செயற்கைக்கோள்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது.
இந்த மின்னல் தாக்கம் “Megaflash” எனப்படும் மிக தீவிரமான மற்றும் நீளமான மின்னல் தாக்கமாகும். இது பொதுவாக பெரிய மேகக்கூட்டங்களுள் (Mesoscale Convective Systems) உருவாகிறது.
2017-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வானத்தைச் சீர்குலைத்த அந்த மின்னல் தாக்கம் இன்று (31 ஜூலை 2025) உலக சாதனையாக ஒப்புக்கொள்ளப்பட்டது. 829 கிலோமீட்டர் நீளமுள்ள மின்னல் தாக்கம் என்பது சுலபமாகக் கேட்பது போல் இருந்தாலும், அது இயற்கையின் கோபத்தையும் அதன் அழுத்த சக்தியையும் நமக்கு நினைவுபடுத்துகிறது.
இவ்வாறான மெகா–மின்னல் தாக்கங்கள் வானியல் சாதனைகள் மட்டுமல்ல இவை மனிதர்களுக்கும், இயற்கைக்கும் ஒரு எச்சரிக்கையாகும். வெயிலின் கடுமை, புயல்களின் பலம், மழையின் அளவு – இவை அனைத்தும் தற்போது விலகி வரும் சமநிலையை காட்டுகின்றன.
GOES-16 போன்ற செயற்கைக்கோள்கள் இந்த மின்னல் தாக்கங்களை மிகச் சீராகப் பதிவு செய்கின்றன. ஆனால், அந்த தகவல்களை மக்கள் வரை கொண்டு செல்லும் விழிப்புணர்வு செயல்முறைகள் தான் இன்னும் பலமாக இருக்க வேண்டிய நிலையில் உள்ளன.
WMO வின் Early Warnings for All திட்டம் மிகவும் நேர்த்தியானது. ஆனால் விலங்குகளுக்கும், கிராமப்புற மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எவ்வாறு இந்த முன்னறிவிப்புகள் சென்று சேரும்? மின்னல் ஒரு இயற்கை நிகழ்வாக மட்டுமல்ல மரணத்திற்கும் வழிவகுக்கும் பேராபத்தாக மாறக்கூடிய ஒன்று ஆகும். மனிதனும் இயற்கையும் இணக்கமாக வாழ வழிகாட்ட வேண்டிய நேரம் இது”. சாதனையை ரசிப்பதும் நம்முடைய பொறுப்பு, ஆனால் அதன் வழியாக வரும் எச்சரிக்கையையும் நன்கு உணரவேண்டும்.
Source:-WMO
கருத்தை பதிவிட