ஆகஸ்ட் 2
பிரபல தொழிலதிபர் “கிளப் வசந்த” கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவரான “லொ(க்)கு பட்டி” என அறியப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா, நேற்று நுகேகொடா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
90 நாள் தடுப்புக் காவல் முடிவதற்குமுன், அவருக்கு பல்வேறு கும்பல்களிடம் இருந்து உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதியே முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2025 மே 4ஆம் தேதி பெலருசிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட “லோகு பட்டி”யிடம் தென்மேற்கு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணையின் போது, அவரிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் சொத்துகள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றம், சந்தேகநபரைக் ஆகஸ்ட் 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கருத்தை பதிவிட