முகப்பு இந்தியா நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்!
இந்தியாசெய்திசெய்திகள்

நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்!

பகிரவும்
பகிரவும்

பிரபல திரைப்பட நடிகரும், நகைச்சுவை கலைஞருமான மதன் பாபு (கிருஷ்ணமூர்த்தி) அவர்கள் சென்னை அடையார் பகுதியிலுள்ள தனது இல்லத்தில் நேற்று (ஆகஸ்ட் 2) மாலை 71வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர்,

தமிழ் சினிமாவில் மதன் பாபு ஒரு தனித்துவமான நகைச்சுவை நடிப்பை உருவாக்கியவர். ராஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
தேவர் மகன், பூவே உனக்காக, வானமே எல்லை, சதி லீலாவதி, தெனாலி போன்ற திரைப்படங்களில் அவரது நகைச்சுவை நடிப்புகள் இன்றும் ரசிகர்கள் மனதில் நினைவில் உள்ளன.

மதன் பாபு, சினிமாவுடன் மட்டும் நின்றுவிடாது, அசத்தப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நியாயாதிபதியாக பணியாற்றி பிரபலமானவர். அவரது இயல்பான சிரிப்பும் நேர்மையான விமர்சனமும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு தூணாக இருந்தன.

திரைப்பட உலகில் கலையரங்கத்தை அடையும் முன்னர், அவர் மியூசிக் கீபோர்ட் கலைஞராக பணியாற்றியிருந்தார். அவரது இசைத் திறமையும், நகைச்சுவையும் ஒருங்கிணைந்து சிறந்த கலையிழைச்சியை வழங்கியதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

தமிழ் மட்டுமல்லாது, இரண்டு மலையாள படங்கள் மற்றும் ஒரு ஹிந்தி திரைப்படத்திலும் மதன் பாபு நடித்துள்ளார். பன்முகம் கொண்ட நடிகராக அவர் திரையுலகில் பாராட்டைப் பெற்றவர்.

மதன் பாபு அவர்களின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது பாணியில் நகைச்சுவை வடிவத்தை உருவாக்கி, புதிய தலைமுறையினருக்கு ஓர் வழிகாட்டியாக இருந்தவர். சமூக ஊடகங்களில் ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல்களையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

பகிரவும்

1 கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...