முகப்பு இலங்கை வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் உதவித்திட்டங்களும் பாராட்டு விழாவும் சிறப்பாக நிறைவு!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் உதவித்திட்டங்களும் பாராட்டு விழாவும் சிறப்பாக நிறைவு!

பகிரவும்
பகிரவும்

இன்று 12.2025 செவ்வாய் கிழமை வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் உதவி திட்டங்கள் வழங்குதலும், பாராட்டு விழாவும் நிகழ்வு என்று சிறப்பாக இடம் பெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சங்கானை பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார் இந்த நிகழ்வின் தலைவராக  பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ ச.ஜயந்தன் அவர்கள் தலைமையேற்று நடத்த பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் மாணவர்கள் என பல நூறு பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கான கல்வி சார் உபகரணங்கள் வழங்குதல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்குதல் உள்ளூர் எழுத்தாளர்களை கௌரவிப்பு நிகழ்வு, சிறந்த வீடு தோட்டம் செய்கையாளர்களை கௌரவித்தல் மற்றும் சுகாதாரப் பொதி வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த உதவி திட்டங்கள் மூலம் 75 மாணவர்கள் பயன்பெற்றதுடன் 30 வறுமைக்குட்பட்ட முதியவர்கள் 25 மாற்றத்திறனாளி மாணவர்கள் போசாக்கு குறைவான பிள்ளைகள் ஆகியோர் உதவிகளை பெற்றுக் கொண்டனர்.

தவிசாளர் அவர்கள் உரையாற்றும் போது இவ்வாறான உதவித்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சியடைவதாகவும் இன்னும் பல உதவித்திட்டங்களை எதிர்வரும் மாதங்களில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சங்கானை பிரதேச செயலாளர் அவர்கள் தனது உரையில் இந்த வலிகாமம் மேற்கு பிரதேச சபையானது வருடா வருடம் இவ்வாறான உதவித் திட்டங்களையும் பாராட்டு மற்றும் ஊக்குவிப்பு செயல்முறைகளையும் ஒரு முன்னோடி யாக செய்து வருகின்ற என பாராட்டினார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் நடைபெற்ற இந்த உதவித்திட்டங்கள் மற்றும் பாராட்டு விழா, சமூக முன்னேற்றத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நேரடியாக பயனளிக்கும் இந்த வகை திட்டங்கள், உண்மையான சேவை மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன.

சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்ற துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், எதிர்கால தலைமுறைக்கு உறுதியான அடித்தளமாக அமையும். குறிப்பாக, உள்ளூர் எழுத்தாளர்களை கௌரவித்தல் மற்றும் சிறந்த வீடு தோட்ட செய்கையாளர்களை பாராட்டுதல் போன்ற முயற்சிகள், சமூகத்தில் திறமைகளை வெளிக்கொணரவும் ஊக்குவிக்கவும் உதவும்.

இத்தகைய திட்டங்கள் ஒருமுறை நிகழ்வாக இல்லாமல், தொடர்ச்சியாக நடைபெறுவதே மிக முக்கியம். மக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால், வலிகாமம் மேற்கு போன்ற பிரதேசங்கள் மட்டுமின்றி, நாட்டின் முழுவதும் சமூக முன்னேற்றம் விரைவாகக் கிடைக்கும்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...