இலங்கையின் புதிய காவல் துறைத் தலைவர் (IGP) பிரியந்த வீரசூரிய. பதவியேற்றவுடன் அடிநிலைக் குற்றவாளிகள் மற்றும் போதைப் பொருள் கும்பல்களுக்கு அரசியல் ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்!
பதவியேற்பு விழாவிற்கு பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், தற்போதைய சட்டங்கள் காவல்துறையின் குற்றத் தடுப்பு முயற்சிகளை முடங்கச் செய்கின்றன என்றார். “பழைய கால சட்ட கருவிகளால் இன்றைய குற்ற வலையமைப்புகளை உடைக்க முடியாது. ஜனாதிபதி, நீதியமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது – புதிய சட்டங்கள் விரைவில் வரும்,” என்றார்.
புதிய சட்டங்கள் தெரு மட்ட குற்றவாளிகள் மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், ஊழல் அதிகாரிகள், அரசியல் ஆதரவுடன் செயல்படும் குற்றவாளிகளையும் குறிவைக்கும் என அவர் கூறினார். இந்த நடவடிக்கைக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவு வழங்குவதாகவும், புலனாய்வு மற்றும் செயற்பாட்டு உதவியும் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைப்பு குற்ற வலையமைப்பின் பிடி, ஆயுதப்படை மற்றும் காவல் துறையின் உள்பகுதியையும் துளைத்திருப்பதை அவர் வெளிப்படுத்தினார். “முதலில் நமது காவல் துறையைச் சுத்திகரிக்கிறோம்; பின்னர் சமூகத்தின் அடுக்குகளையும் சீர்செய்வோம்,” என்று வீர சத்தியம் எடுத்தார்.
சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பிலும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார் இராணுவ ஆயுதங்கள், முன்னாள் எல்.டி.டி.இ. களஞ்சியம், திருடப்பட்ட துப்பாக்கிகள், காவல் துறையின் ஆயுதங்கள் எனப் பலவும் இன்னும் பொதுமக்களின் கைகளில் உள்ளன. அவற்றை மீட்டெடுக்க விசேட புலனாய்வுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
குற்றவாளிகள் அல்லது போதை வலைப்பின்னல்களுடன் தொடர்பு கொண்ட காவல்துறையினருக்கு உடனடி இடைநீக்கம் மற்றும் வழக்குத் தொடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். “நீங்கள் ஊழலின் பாதையில் இருந்தால், காவல்துறை அடையாள அட்டையும் உங்களை காப்பாற்றாது,” என உறுதியளித்தார்.
கருத்தை பதிவிட