யாழ்ப்பாணம் ஹோண்டாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்து அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் மோட்டார் சைக்கிளின் மீது ஏறி மிதித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்ததாக இருப்பதோடு, இவ்வீதிகளில் டிப்பர் வாகனங்கள் அதிகமாகச் செல்வது வழக்கமாகி விட்டது. இதனால், மக்களின் உயிர் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகி வருவதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமான நேரங்களிலும், குறுகிய வீதிகளிலும் டிப்பர் வாகனங்கள் செல்லும் நிலை தொடர்ந்து நீடிக்கின்றது. இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உள்ளூர் மக்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகள் மற்றும் நேரங்களில் டிப்பர் வாகனங்கள் செல்லாதவாறு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
கருத்தை பதிவிட