வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (18) முழு ஹர்த்தால் நடைபெறவுள்ளது என தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் 32 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த ஹர்த்தால் நீதி மற்றும் பொறுப்பேற்பை வலியுறுத்தும் மக்கள் போராட்டமாக காட்ட முனைகின்றார்கள்.
அந்த இளைஞர் மூடப்படவிருந்த சிவனகரில் அமைந்திருந்த சிங்கள ரெஜிமென்ட்டின் 12ஆம் படைப்பிரிவின் இராணுவ முகாமுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. சம்பவத்திற்குப் பின் மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. ஆனால் சில அரசியல் சக்திகள் உண்மைகளை மாற்றி காட்டி மக்களிடையே கலகம் ஏற்படுத்த முயல்கின்றன” என எச்சரித்தார். மக்கள் உண்மையை உணர்ந்து அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்தை பதிவிட